விக்டர் சீட்ஸ் பவுண்டேஷனின் நிறுவனராகிய நான்.................என் பெயர் அருனி வேலழகன் மற்றும் நான் Bruderkrankenhaus trier இல் ஒரு டாக்டராக பணிபுரிந்து வருகிறேன். 2015 ஆம் ஆண்டில் நான் நேபாளத்தில் Bhaktapur இல் ஏற்பட்ட பூகம்பத்தின் போது உதவி நிறுவனம் NAVIS e.V   உடன் பயணம் செய்தேன். அங்கே பல நேர்மையான இளைஞர்களை சந்தித்தேன், எதிர்மறையான மற்றும் நேர்மறையான எண்ணங்கள் என்னை வடிவமைத்தன. ஏற்கனவே அங்கு, நான் மருத்துவ முகாமுக்கு வெளியே உள்ள இளைஞர்களுடன் சேர்ந்து பல சிறிய திட்டங்களை ஆரம்பித்தேன்.
நான் நாட்டை விட்டு வெளியேறியபோது, நான் இந்த மக்களுக்காக தொடர்ந்தும் உதவி செய்வேன் என்று நான் முடிவு செய்தேன். என் கடந்த காலத்திலேயே ஸ்ரீலங்காவிர்கும் இந்தியாவிற்குமான  தொன்டுகளில் நான் மிகவும் தீவிரமாக செயற்பட்டேன். இந்தியாவிற்கான எனது பயணம் எனக்கு ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. எனவே, ஜெர்மனியில் பல இளைஞர்களுடன் ஒரு கூட்டுறவைத் தொடங்க நான் தீர்மானித்தேன். மூன்று நாடுகளும் நேர்மறையான மற்றும் எதிர்மறையான ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன. உணவு, உடை, மதங்கள், வரலாறு மற்றும் மனநிலை ஆகியவை நேர்மறையான அர்த்தத்திலும். ஊழல், சாதி அமைப்பு, வறுமை, சிறார் உழைப்பு மற்றும் உயர் கல்வியறிவு விகிதம் எதிர்மறை அர்த்தத்திலும், எல்லாவற்றையும் மாற்ற முடியாது என்று நாங்கள் அறிந்திருக்கிறோம், ஆனால் மாற்றத்தின் ஒரு பகுதியை நாம் அடைய விரும்புகிறோம்.அருனி வேலழகன்
23,12,2016